/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி
/
டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி
ADDED : ஜன 24, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிராக்டர் மோதியதில் லாரி டிரைவர் பலி
காங்கேயம், :ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ராசாம்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார், 41; ஹோண்டா பைக்கில் திருப்பூர் மாவட்டம் முத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று வந்தார். பிறகு முத்துார்--ஆலம்பாளையம் ரோட்டில் நம்பகவுண்டம்பாளையத்தில் சென்றபோது, டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

