/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குமானிய யூரியாவை பயன்படுத்தாதீர்'
/
'விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குமானிய யூரியாவை பயன்படுத்தாதீர்'
'விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குமானிய யூரியாவை பயன்படுத்தாதீர்'
'விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குமானிய யூரியாவை பயன்படுத்தாதீர்'
ADDED : ஜன 24, 2025 01:21 AM
'விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குமானிய யூரியாவை பயன்படுத்தாதீர்'
ஈரோடு, :ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பயன்பாட்டுக்கு, யூரியா, டி.ஏ.பி., - பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் ஆகிய மானிய விலை உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானிய விலை யூரியா, 45 கிலோ மூட்டை, 266.50 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் குற்றமாகும். அதுபோல தரமற்ற, போலி உரங்களை தயாரித்தல், விற்பனை செய்தல், உரம் கடத்துதல், பதுக்குதல் கண்டறியப்பட்டால், உர உரிமம் ரத்து செய்யப்படும். வழக்கு தொடரப்பட்டு, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளார்.