/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரசாரத்துக்கு நெருக்கடி; நா.த.க., குற்றச்சாட்டு
/
பிரசாரத்துக்கு நெருக்கடி; நா.த.க., குற்றச்சாட்டு
ADDED : ஜன 25, 2025 01:55 AM
பிரசாரத்துக்கு நெருக்கடி; நா.த.க., குற்றச்சாட்டு
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி வக்கீல் பிரிவு பொறுப்பாளர்கள் நேற்று மனு வழங்கினர். இதுகுறித்து வக்கீல் சுரேஷ் கூறியதாவது:
கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் விதிகளின்படி செயல்படுகிறோம்.  பொதுக்கூட்டங்கள் மூலம், மக்களை சந்தித்து சீமான் ஓட்டு சேகரிக்க முயல்கிறார். போலீசார் தெரிவித்திருந்த இடத்தில்தான் பொதுக்கூட்டத்துக்கு முறையாக அனுமதி கேட்டோம். ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழும் இடம் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மீண்டும் வேறு இடத்தை சுட்டிக்காட்டி விண்ணப்பிக்கும்போது, 48 மணி  நேரத்துக்கு முன்கூட்டி விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி தேர்தல் அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
இப்படி போலீசார், தேர்தல் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போது எஸ்.பி., மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து விளக்கிய பிறகு இடம் தந்துள்ளனர். தொடர்ந்து இதுபோல் அனுமதி வழங்காமல் நெருக்கடி தருவதால், எங்களால் பிரசாரத்தை தொடர்ந்து செய்ய இயலவில்லை.
இவ்வாறு கூறினர்.

