/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : பிப் 09, 2025 01:26 AM
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
காங்கேயம்:டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ., மீண்டும், ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன்படி காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா சரவணன் தலைமையிலான கட்சியினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி மகழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், கலா, சித்ராதேவி, நகர பொது செயலாளர்கள் பிரவீன், மணிகண்டன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* தாராபுரத்தில் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், ஓ.பி.சி.. அணி மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் தலைமையிலான கட்சியினர், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு லட்டு வழங்கியும் கொண்டாடினர்.

