/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்
/
சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்
ADDED : பிப் 14, 2025 01:12 AM
சாலையோரம் இரை தேடிஇரையாகும் கால்நடைகள்
காங்கேயம், :காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்பூர் சாலை, பழையகோட்டை, கோவை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பிரதான சாலையில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. கனரக வாகனங்களும் அதிகம் செல்லும் சாலையாக உள்ளது. ஆனால், ஆபத்தை உணராமல் இந்த சாலைகளின் ஓரத்தில், சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கால்நடைகள் சாலையை கடக்கும்போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. டூவீலர் மற்றும் இலகு ரக வாகனம் என்றால், கால்நடை மட்டுமின்றி, வாகனம் ஓட்டுவோரும் பாதிக்கின்றனர். அதேசமயம் கனரக வாகனம் என்றால், கால்நடைகள் உடல் சிதறி சாலையில் கறித்துகள்காக சிதறுகின்றன. சென்னிமலை சாலையில் நேற்று சாலையை கடந்த இரு செம்மறி ஆடுகள் உடல் சிதறி பலியாகின. சாலையோரம் கால்நடைகள் மேய விடுவதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். அதேசமயம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

