/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டி அடைக்கும் போராட்டம்பா.ஜ., நிர்வாகி எச்சரிக்கை
/
பட்டி அடைக்கும் போராட்டம்பா.ஜ., நிர்வாகி எச்சரிக்கை
பட்டி அடைக்கும் போராட்டம்பா.ஜ., நிர்வாகி எச்சரிக்கை
பட்டி அடைக்கும் போராட்டம்பா.ஜ., நிர்வாகி எச்சரிக்கை
ADDED : பிப் 14, 2025 01:14 AM
பட்டி அடைக்கும் போராட்டம்பா.ஜ., நிர்வாகி எச்சரிக்கை
ஈரோடு, :ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் விடுத்துள்ள அறிக்கை: சென்னிமலை, ராமலிங்கபுரம் பகுதியில் நாய்கள் கடித்து, 25க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டபோது பேச்சுவார்த்தைக்கு பெருந்துறை தாசில்தார் வந்தார். அவரது கண் முன்னே ஆடுகளை நாய்கள் கடித்து குதறி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க தவறிய அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழிக்கு கடும் கண்டனத்தை கட்சி தெரிவித்து கொள்கிறது. அரசு, எம்.எல்.ஏ.,க்களுக்கு பலமுறை கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தெருநாய்களை பிடிக்கவும், இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவும் வேண்டும். அரசு தவறும்பட்சத்தில் விவசாயிகளை திரட்டி, பாதுகாப்பற்ற ஆடுகளை கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் பட்டியில் அடைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க பா.ஜ., தயங்காது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.