/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடுகளை கொல்லும் நாய்கள்கட்டுப்படுத்த பா.ஜ., முறையீடு
/
ஆடுகளை கொல்லும் நாய்கள்கட்டுப்படுத்த பா.ஜ., முறையீடு
ஆடுகளை கொல்லும் நாய்கள்கட்டுப்படுத்த பா.ஜ., முறையீடு
ஆடுகளை கொல்லும் நாய்கள்கட்டுப்படுத்த பா.ஜ., முறையீடு
ADDED : பிப் 18, 2025 01:17 AM
ஆடுகளை கொல்லும் நாய்கள்கட்டுப்படுத்த பா.ஜ., முறையீடு
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா மற்றும் நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தெருநாய்கள் கடித்து, 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.
இறந்த ஆடுகளுக்கு நஷ்டயீடு கோரி விவசாயிகள் போராடியபோது, தாராபுரம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாளில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடந்த, 6 ல் உறுதியளித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த, 10ல் பெருந்துறை தாசில்தார் கண் முன், சென்னிமலையில் ஆடுகளை நாய்கள் கடித்ததை பார்த்தார். தெரு நாய்களை கட்டுப்படுத்த, ஆடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர். அப்போது கலெக்டர் அலுவலகம் வந்த அமைச்சர் முத்துசாமியிடமும் முறையிட்டனர். கலெக்டர், வனத்துறை, கால்நடை துறையினரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்.