/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில்பைக் மீது மோதிய வேன்
/
திம்பம் மலைப்பாதையில்பைக் மீது மோதிய வேன்
ADDED : பிப் 19, 2025 01:58 AM
திம்பம் மலைப்பாதையில்பைக் மீது மோதிய வேன்
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சாம் தினகரன், 29; ஆசனுாரிலிருந்து ஹீரோ இம்பல்ஸ் பைக்கில் சத்திக்கு நேற்று வந்தார். திம்பம் மலைப்பாதையில், 23வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, உடுமலையிலிருந்து சாம்ராஜ் நகருக்கு சென்ற ஈச்சர் வேன் மோதியது. இதில் சாம் தினகரன், 20 அடி பள்ளத்தில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கயிறு மூலம் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டி வந்த உடுமலையை சேர்ந்த டிரைவர் சின்னராஜா மீது, ஆசனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ல் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு, 18 வயது, ஆண்களுக்கு, 21 வயது நிறைவடைந்தால் சட்டப்பூர்வமாக திருமணத்துக்கான வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர், உறவினர், மணம் முடித்து வைக்கும் பூசாரி அல்லது குருமார், மண்டபம், சமுதாய கூட உரிமையாளர்களும் தண்டனைக்குரியவர்கள். அவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும். சைல்டு லைன் இலவச எண்: 1098, மகளிர் உதவி இலவச அழைப்பு எண், 181, புதிய அலைபேசி எண்: 89031 67788ல் புகார் தெரிவிக்கலாம்.