/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவிலில் இன்று சூரியகாந்தி விதை ஏலம்
/
வெள்ளகோவிலில் இன்று சூரியகாந்தி விதை ஏலம்
ADDED : பிப் 20, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவிலில் இன்று சூரியகாந்தி விதை ஏலம்
வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும், வாணியம்பாடி, மூலனுார், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி, ஈரோடு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு, சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவர், தற்போது, சூரியகாந்தி விதை வரத்து வரும் நிலையில் உள்ளதால், இன்று (பிப்.,20) முதல் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும் என, வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

