/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு
/
சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு
ADDED : பிப் 21, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்து வெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கு
ஈரோடு:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில், 'சிந்துவெளி பண்பாடு நுாற்றாண்டு கருத்தரங்கம்' ஈரோட்டில் நடந்தது. சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைக்கோவன் வரவேற்றார்.
மாநிலக்குழு உறுப்பினர் நவகவி, 'சிந்துவெளி வந்த வழி' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். 'சிந்துவெளி ஆய்வுகள் - புதிய உண்மைகள்' என்ற தலைப்பில் முனைவர் பக்தவத்சல பாரதி, 'சிந்துவெளி நம்ம வெளி' என்ற தலைப்பில் மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினர். மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார். எழுத்தாளர், வாசகர்கள்
பங்கேற்றனர்.