/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி பஸ் ஸ்டாண்டில்முதியவர் படுகாயம்
/
சத்தி பஸ் ஸ்டாண்டில்முதியவர் படுகாயம்
ADDED : பிப் 23, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி பஸ் ஸ்டாண்டில்முதியவர் படுகாயம்
சத்தியமங்கலம்:காசிபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 65; சத்தி பஸ் ஸ்டாண்டில் அத்தாணி செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் நேற்று மதியம் நடந்து சென்றார். அப்போது மேட்டுப்பாளையம் ரேக்கிற்கு வந்த அரசு பஸ் கோபால் மீது மோதியதில், வலது காலில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து டிரைவர் சந்திரனிடம், சத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.