/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் விளையாட்டு விழா
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : பிப் 23, 2025 01:53 AM
வி.இ.டி., கலை கல்லுாரியில் விளையாட்டு விழா
ஈரோடு, :ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உடற்கல்வியியல் துறை சார்பில் ஆறாவது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே விளையாட்டு துறை அலுவலர் அனிதா பால்துரை கலந்து கொண்டார்.
தேசியக்கொடியை ஏற்றிவைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்வில் வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் தலைமையுரை ஆற்றினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் யுவராஜா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் நல்லசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் கலந்து கொண்டார்.
தேசிய மாணவர் படையினர், பாண்டியா, சோழா, சேரா, பல்லவா அணிகளாக பிரிந்து போட்டிகள் நடந்தன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை பாண்டியா அணியினர் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசளிப்பு விழா நடந்தது.