/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி கொட்டும் குப்பையில் தீ விபத்து
/
நகராட்சி கொட்டும் குப்பையில் தீ விபத்து
ADDED : பிப் 26, 2025 01:11 AM
நகராட்சி கொட்டும் குப்பையில் தீ விபத்து
பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள, திடக்கழிவு மேலாண்மை திட்ட உரத்திடலில் கொட்டப்படுகிறது.
நேற்றிரவு இந்த திடல் அருகே காலியிடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் முழுவதும் பரவி, 50 அடி உயரத்துக்கு கரும்புகை பரவியது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகும் இரவு முழுவதும் புகை வந்தபடியே இருந்தது. திடக்கழிவு மேலாண்மை திட்ட உரத்திடல் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு தீ பரவ வில்லை. இதனால் பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை.
வாரச் சந்தை வளாகத்தில் காலி இடங்களில் கொட்டப்படும் குப்பையில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு குப்பை கொட்டுவதை தவிர்த்து, தரம் பிரிக்கும் மையத்துக்கு கொண்டு சென்று முறையாக தரம் பிரித்தால் தீ விபத்தை தவிர்க்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

