/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.டி.ஐ.,ல் பதில் தாமதம்; அலுவலருக்கு அபராதம்
/
ஆர்.டி.ஐ.,ல் பதில் தாமதம்; அலுவலருக்கு அபராதம்
ADDED : பிப் 26, 2025 01:14 AM
ஆர்.டி.ஐ.,ல் பதில் தாமதம்; அலுவலருக்கு அபராதம்
ஈரோடு : சென்னிமலை, செந்தாம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் யுவராசன், 42; ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு துறையில், முகாசிபிடாரியூர் கிராமத்தில் தொழில் நுட்ப அனுமதி வழங்கிய வீட்டுமனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தருமாறு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரி இருந்தார்.
கடந்த, 2022 மார்ச், 21ல் மனு அளித்தும், மாவட்ட நகர் ஊரமைப்பு துறையினர், 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை. மேல் முறையீடு செய்ததில், தாமதமாக பதிலளித்தனர். தாமதமாக பதிலளித்த ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை கோரி, சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையருக்கு புகாரளித்தார்.
இதில் இறுதி விசாரணை நடத்திய தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர், ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு பொது தகவல் அலுவலரும், மேற்பார்வையாளருமான ஜாய் ஹெப்சி பியூலாவுக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.