/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணை பதிவாளர் பொறுப்பேற்பு
/
மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணை பதிவாளர் பொறுப்பேற்பு
மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணை பதிவாளர் பொறுப்பேற்பு
மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணை பதிவாளர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 27, 2025 02:17 AM
மண்டல கூட்டுறவு சங்கங்களின்இணை பதிவாளர் பொறுப்பேற்பு
ஈரோடு:ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியாற்றிய ராஜ்குமார், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியாற்றி வந்த கந்தராஜா, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே, ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராக பணியாற்றி வந்தவர்.
* ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தது. இப்பணியிடத்துக்கு, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக சார் பதிவாளராக பணியாற்றி வந்த பிரகாஷ், பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளராக பொறுப்பேற்றார்.