ADDED : மார் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி மாயம்: கணவன் புகார்
ஈரோடு:ஈரோடு, சூளை, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 39; இவரின் மனைவி தாமரைசெல்வி, 25; வெவ்வேறு தரப்பை சேர்ந்த இருவருக்கும், கடந்தாண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகே தாமரைசெல்வி திருமணமாகி கணவரை பிரிந்தவர் என சவுந்திரராஜனுக்கு தெரிந்தது.
மேலும் இல்லற வாழ்வில் பிடிப்பின்றி இருந்துள்ளார். இந்நிலையில் தாமரைசெல்வி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். சவுந்திரராஜன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.