sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

'அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

'அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்'


ADDED : மார் 09, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

'அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட மருத்துவ துறை பணியாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி, செவிலியர் பயிற்சி பள்ளியில், 157 துாய்மை பணியாளர்கள், 37 பாதுகாவலர் பணியாளர்கள், 7 மேற்பார்வையாளர்கள் அவுட் சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். கொரோனா காலத்திலும், அதன் பின்னும் கட்டடம், மருத்துவமனையின் படுக்கை வசதிகள், புதிய பிரிவுகள் என உருவானதால், நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தேவைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேலைப்பளுவை குறைக்க, 400 பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

அதுபோல, ஈரோடு அரசு மருத்துவமனையில், 131 பணியாளர்கள் உள்ளதை, 300 என அதிகரிக்க வேண்டும். 'கிரிஸ்டல், க்யூ.பி.எம்.எஸ்., என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், இவர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் கலெக்டர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலியை வழங்கவில்லை என்பதுடன், கூடுதல் பணிச்சுமையை வழங்குகின்றனர். இதனால் வேலை நிறுத்தம், போராட்டத்துக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டு, தொழிலாளர் துறை பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே, இதுபற்றி, கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us