/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
/
நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : மார் 09, 2025 01:42 AM
நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பொதுமக்கள்
நம்பியூர்:நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்தினர், முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பை துண்டித்ததால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு என்ற முறையில் குடிநீர் வரி, சொத்து வரி மற்ற இதர வரியினங்கள்
வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் முன்னறிவிப்பியின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை பொதுமக்கள், நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த, நம்பியூர் போலீசார், அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.