/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை அருகேநாய்கள் கடித்து ஆடு பலி
/
சென்னிமலை அருகேநாய்கள் கடித்து ஆடு பலி
ADDED : மார் 13, 2025 02:00 AM
சென்னிமலை அருகேநாய்கள் கடித்து ஆடு பலி
சென்னிமலை:சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, கே.ஜி.வலசு, பாலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி
கவுண்டர். இவரது மகன் ஜெகநாதன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் நேற்று காலை, 11:00 மணியளவில் மேய்ந்து கொண்டிருந்த இரு ஆடுகளை, மூன்று தெரு நாய்கள் துரத்தி கடித்துள்ளன. இதில், ஒரு ஆடு இறந்து விட்டது. சென்னிமலை பகுதியில் இதுவரை, தெரு நாய்கள் இரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை தான் கடித்து வந்தது. முதன் முறையாக கே.ஜி., வலசு பகுதியில், நேற்று பட்டப்பகலில் கடித்தது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்நடைத்துறை மருத்துவர்கள், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு தருவதாக உறுதியளித்தனர்.