/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதி கோவிலில் குண்டம் இறங்கும் விழா
/
வனப்பகுதி கோவிலில் குண்டம் இறங்கும் விழா
ADDED : மார் 13, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனப்பகுதி கோவிலில்குண்டம் இறங்கும் விழா
அந்தியூர்:அந்தியூர் அடுத்த, நகலுார் பெருமாபாளையம் அருகேயுள்ள வனப்பகுதியில் கொம்பு துாக்கியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் மாசி மாத குண்டம் திருவிழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று நடந்த குண்டம் திருவிழாவுக்கு, பெருமாபாளையம், நகலுார் சுற்று வட்டாரத்திலுள்ள, 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சிறப்பு பூஜை முடிந்தவுடன், பூசாரி குண்டம் இறங்கியதை தொடர்ந்து, விரதமிருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறிது நேரத்தில், அப்பகுதியில் மிதமான மழை பெய்தது.