/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு
/
காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு
ADDED : மார் 14, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி ஆற்றில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு
பவானி:அம்மாபேட்டை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்று பரிசல் துறை அருகே, நேற்று முன்தினம் பெண் சடலம் மிதந்தது. அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் தர்மபுரி மாவட்டம் மாண்டஹள்ளியை சேர்ந்த கந்தம்மாள், 75, என தெரிவந்தது.
கடந்த, 9ல் வீட்டிலிருந்து காணாமல் போனதும், மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் அவரது உறவினர்கள் அன்றே புகார் கொடுத்ததும் தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு கந்தம்மாள் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.