/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுத்தைப்புலி வதந்தியால் துாக்கத்தை இழந்த மக்கள்
/
சிறுத்தைப்புலி வதந்தியால் துாக்கத்தை இழந்த மக்கள்
ADDED : மார் 14, 2025 01:41 AM
சிறுத்தைப்புலி வதந்தியால் துாக்கத்தை இழந்த மக்கள்
சென்னிமலை:சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டன்குட்டையில், ௫0 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணியளவில் இப்பகுதியில் சாலையை கடந்து சிறுத்தை புலி சென்றதாக தகவல் பரவியது.
இதனால் வீடுகளில் முடங்கிய மக்கள், ஒருவருக்கு ஒருவர் மொபைல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டனர். இதனால் அருகிலுள்ள கணபதிபாளையம், ஒட்டவலசு, சூளைப்புதுார் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முதலில் தகவல் தெரிவித்த ஆசாமியிடம் விசாரித்தபோது, சிறுத்தைப்புலி அல்ல என்பதும், புள்ளிமான் என்பதும் தெரிய வந்தது. மொத்தத்தில் வதந்தியால் ஒட்டன்குட்டை மட்டுமின்றி பக்கத்து கிராம மக்களும் துாக்கத்தை இழந்தனர்.