/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
/
பூக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
ADDED : மார் 15, 2025 02:51 AM
பூக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், பூக்கடை வைக்க தடை விதிக்கப்பட்டதால், கோவிலை ஒட்டிய இடங்களிலும், சத்தி ரோட்டுக்கும் கடைகள் இடம் பெயர்ந்தன. இந்நிலையில் பத்ரகாளியம்மன் கோவிலை ஒட்டி, ஈஸ்வரன் கோவில் மற்றும் சிவசக்தி நகர், டீச்சர்ஸ் காலனி இடங்களுக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து பூக்கடை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. கோவிலுக்கு கூட்டம் அதிகமாக வரும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல முடிவதில்லை. பூக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் கடைக்காரர்கள் கண்டு கொள்ளவில்லை என்று வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்தனர். அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம், கடைகளை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.