/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொலைவெறி தாக்குதல் களமாகும்சூரம்பட்டி டாஸ்மாக் பாரால் அச்சம்
/
கொலைவெறி தாக்குதல் களமாகும்சூரம்பட்டி டாஸ்மாக் பாரால் அச்சம்
கொலைவெறி தாக்குதல் களமாகும்சூரம்பட்டி டாஸ்மாக் பாரால் அச்சம்
கொலைவெறி தாக்குதல் களமாகும்சூரம்பட்டி டாஸ்மாக் பாரால் அச்சம்
ADDED : மார் 18, 2025 02:18 AM
கொலைவெறி தாக்குதல் களமாகும்சூரம்பட்டி டாஸ்மாக் பாரால் அச்சம்
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 25, கூலி தொழிலாளி. இவர் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு சூரம்பட்டி பள்ளிகூட பஸ் நிறுத்தம் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது குடித்து கொண்டிருந்தார். பாரதிபுரத்தை சேர்ந்த சசிகுமார், 35; கவுந்தப்பாடி கிருஷ்ணன், 25, ஆகியோர் மது குடிக்க வந்தனர். இவர்கள் மீதும் அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களுக்கும், அருண் குமாருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. அருண்குமாரை தனியாக பார்த்த நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியதில் அருண்குமார் சரிந்தார். இதைப்பார்த்த மற்ற குடிமகன்கள் ஓட்டம் பிடித்தனர். சூரம்பட்டி போலீசார் அருண்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சசிகுமார், கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
இந்த டாஸ்மாக் பாரில் கொலை வெறி தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடப்பதால், பாரை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.