/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலைகளை மாற்றி அமைக்க எதிர்ப்பு; காங்., மனு
/
சிலைகளை மாற்றி அமைக்க எதிர்ப்பு; காங்., மனு
ADDED : மார் 27, 2025 01:37 AM
சிலைகளை மாற்றி அமைக்க எதிர்ப்பு; காங்., மனு
ஈரோடு:ஈரோடு மாநகர மாவட்ட காங்., பொறுப்பாளர் திருசெல்வம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினத்திடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலை, சம்பத் சிலையை வேறிடத்துக்கு மாற்றி வைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக சொன்னார்கள். இவ்விரு சிலைகளால் தற்போது போக்குவரத்துக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை.
எனவே சிலையை இடமாற்றம் செய்ய வேண்டாம். இவ்வாறு மனுவில் கேட்டு கொண்டார். இதேபோல் நாடார் மகாஜன சங்க, மாநகர செயலாளர் சின்னதம்பியும், இதே பிரச்னை தொடர்பாக மேயரிடம் மனு அளித்தார். இதற்கிடையில் நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், சிலைகளை மாற்றி வைக்க கோரும் தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக, மேயர் அறிவித்தார்.