/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு கலை கல்லுாரி சார்பில்மனித சங்கிலி விழிப்புணர்வு
/
அரசு கலை கல்லுாரி சார்பில்மனித சங்கிலி விழிப்புணர்வு
அரசு கலை கல்லுாரி சார்பில்மனித சங்கிலி விழிப்புணர்வு
அரசு கலை கல்லுாரி சார்பில்மனித சங்கிலி விழிப்புணர்வு
ADDED : மார் 27, 2025 01:38 AM
அரசு கலை கல்லுாரி சார்பில்மனித சங்கிலி விழிப்புணர்வு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு நேற்று நடை
பெற்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, 2012ம் ஆண்டு மார்ச், 21ம் தேதியை சர்வதேச காடுகள் தினமாக அறிவித்தது. இந்த நாள், அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தை கொண்டாடுகிறது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதே போல, உலக தண்ணீர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச், 22 அன்று அனுசரிக்கிறது.
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் சார்பில், நேற்று உலக தண்ணீர் தினம் மற்றும் சர்வதேச காடுகள் தினத்தை ஒட்டி, மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது. மனித சங்கிலி நிகழ்வை கல்லுாரி முதல்வர் வசந்தி துவக்கி வைத்தார். இதில் காடுகளை பாதுகாப்பதற்கும், தண்ணீர் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும், தண்ணீர் வளங்களை பாதுகாப்பதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மனித சங்கிலி விழிப்புணர்வில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் துவங்கி, புங்கம்பாடி பிரிவு வரை வரிசையாக நின்றனர்.
மாணவ மாணவியர் தண்ணீர் மாசுபடுவதை குறித்தும், காடுகள் அழிக்கப்படுவதை குறித்தும் பொதுமக்களிடையே உரக்கச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை தலைவியுமான முனைவர் காளீஸ்வரி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.