/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புமக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பு
/
தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புமக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பு
தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புமக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பு
தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புமக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பு
ADDED : மார் 27, 2025 01:59 AM
தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புமக்களின் எதிர்ப்பை மீறி அமைப்பு
சென்னிமலை:சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட துலுக்கம்பாளையம், ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிப்காட் பகுதிகளுக்கு இடையே செல்லும் ரயில் பாதையில், இருபுறமும் சில நாட்களுக்கு முன்பு இரும்பு தடுப்பு அமைக்க பணி தொடங்கியது.
இவ்வழியாக பெருந்துறை சிப்காட் பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் நிறைய பேர் செல்கின்றனர். அந்த பாதையை தடுக்கும் வகையில் ரயில்வே துறை இரும்பு தடுப்பு அமைத்தால், சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்ல, ௪ கி.மீ., கூடுதலாக சுற்றி செல்லும் நிலை ஏற்படுவம் என்று மக்கள், பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் உள்ளிட்டோரிடம் மனுவும் அளித்திருந்தனர். தற்போது பொக்லைன் இயந்திரத்துடன் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.