/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமாவாசை நாளில் கிராம சபா?விடுமுறை நாளில் நடத்தலாமே
/
அமாவாசை நாளில் கிராம சபா?விடுமுறை நாளில் நடத்தலாமே
அமாவாசை நாளில் கிராம சபா?விடுமுறை நாளில் நடத்தலாமே
அமாவாசை நாளில் கிராம சபா?விடுமுறை நாளில் நடத்தலாமே
ADDED : மார் 28, 2025 12:59 AM
அமாவாசை நாளில் கிராம சபா?விடுமுறை நாளில் நடத்தலாமே!
நமது நிருபர்
அமாவாசை மற்றும் சனிப்பெயர்ச்சி நாளில் கிராமசபா கூட்டம் நடத்துவது பெயரளவுக்கே இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தப்படும் என, தமிழக அரசு
அறிவித்திருந்தது.
இந்த கிராமசபா கூட்டத்தில், உலக தண்ணீர் தினம் கருப்பொருள் குறித்து விவாதிப்பது, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது மற்றும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிப்பதுடன்,
பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 22 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கிராமசபா கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக, மார்ச் 29 அன்று ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, நாளை (சனிக்கிழமை) கிராம சபா கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை அமாவாசை மற்றும் சனிப்பெயர்ச்சி விழா ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. அமாவாசை நாளில், ஹிந்துக்கள் கோவில்களுக்கு செல்வதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதுமான நடவடிக்கைகளில்
ஈடுபடுவார்கள்.
மேலும், இதே நாளில் சனிப்பெயர்ச்சி விழாவும் நடப்பதால், பெரும்பாலான பொதுமக்கள் கோவில்களில் குவிந்து விடுவர். இந்நாளில், கிராம சபா கூட்டம் நடத்துவது என்பது பெயரளவுக்கே இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று கிராம சபா நடத்துவது உண்மையில் பயனளிப்பதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.