/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி மீது கார் மோதிஆன்லைன் டிரேடர் பலி
/
லாரி மீது கார் மோதிஆன்லைன் டிரேடர் பலி
ADDED : மார் 30, 2025 01:50 AM
லாரி மீது கார் மோதிஆன்லைன் டிரேடர் பலி
ஈரோடு:லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆன்லைன் டிரேடர் பலியானார்.ஈரோடு, வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி, 49. ஆன்லைனில் டிரேடிங் செய்து வந்தார். திருமணமானவர்; குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:45 மணிக்கு ஈரோட்டில் இருந்து எழுமாத்துார் நோக்கி, ஸ்கோடா காரில் சென்றார். சின்னியம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே சென்ற போது, விறகு லோடுடன் வேடசந்துாரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார், லாரியின் முன்புற பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மூர்த்தி, லாரி டிரைவர் பெருமாளுக்கும் வலது காலில் ரத்த காயம் ஏற்பட்டது. இருவரும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் மூர்த்தி இறந்ததை, ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர். பெருமாள், சிகிச்சை பெற்று வருகிறார். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.