/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீ விபத்தில் எரிந்த வீடுஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,
/
தீ விபத்தில் எரிந்த வீடுஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 01, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீ விபத்தில் எரிந்த வீடுஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சி, 17வது வார்டு ஜெ.ஜெ.,நகரை சேர்ந்தவர் விஜயகுமார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும், வீடு மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பண்ணாரி, தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை நேற்று பார்வையிட்டு, விஜயகுமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி தொகை வழங்கினார். நகர செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

