/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காட்டில் வாலிபர் கொலை தனிப்படை அமைத்து விசாரணை
/
காட்டில் வாலிபர் கொலை தனிப்படை அமைத்து விசாரணை
ADDED : ஏப் 03, 2025 01:43 AM
காட்டில் வாலிபர் கொலை தனிப்படை அமைத்து விசாரணை
அந்தியூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சின்னக்குத்தியை சேர்ந்தவர்கள் சக்திவேல், 25, வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார். இவர்கள், 10 நாட்களுக்கு முன், அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் அடுத்த தட்டகரை வனச்சரகம், போதமலை எம்மம்பட்டி பகுதியில் சந்தன மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி சத்தம் கேட்டு தப்பியோடினர். சக்திவேல் மட்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், எரிந்த நிலையில் சக்திவேலின் தலை மற்றும் எலும்பு துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், தலை மற்றும் எலும்பு துண்டை கைப்பற்றி டி.என்.ஏ., ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இவரை கொலை செய்தது யார்? இவர்களோடு வேறு நபர்கள் வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இவருடன் வந்த குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது;பர்கூர் காட்டில் சந்தன மரம் வெட்ட வந்த நால்வரும், சாராயம் காய்ச்சுதல், ஆந்திராவில் செம்மரம் வெட்டுவது ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பர்கூர் காட்டில் சந்தன மரம் வெட்ட சென்று, எரிந்த நிலையில் கிடந்த சக்திவேலின் பாகங்களை கைப்பற்றி விசாரித்து வருகிறோம். சக்திவேலை, செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் கொன்றனரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். தப்பியோடிய குமார் பிடிபட்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு கூறினர்.

