/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் காட்டில் நடந்த கொலையில்கைதான இருவர் சிறையிலடைப்பு
/
பர்கூர் காட்டில் நடந்த கொலையில்கைதான இருவர் சிறையிலடைப்பு
பர்கூர் காட்டில் நடந்த கொலையில்கைதான இருவர் சிறையிலடைப்பு
பர்கூர் காட்டில் நடந்த கொலையில்கைதான இருவர் சிறையிலடைப்பு
ADDED : ஏப் 05, 2025 01:50 AM
பர்கூர் காட்டில் நடந்த கொலையில்கைதான இருவர் சிறையிலடைப்பு
அந்தியூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, சின்னக்குத்தியை சேர்ந்தவர் சக்திவேல், 25; கடந்த மாதம், 31ம் தேதி, பர்கூர்மலை அருகேயுள்ள தட்டகரை வன சரகம், போதமலை, எம்மம்பட்டி பள்ளத்தில், சக்திவேல் எரித்து கொலை செய்யப்பட்டு தலை மட்டும் கிடந்தது.
சக்திவேல் மனைவியின் அண்ணன் வெங்கடேஷ். இவருடைய இரண்டாவது மனைவியுடன் சக்திவேலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. வெங்கடேஷ்
கண்டித்தும் தொடர்ந்ததால், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனுடன் சேர்ந்து, சக்திவேலை மரம் வெட்ட அழைத்து வந்து, கொலை செய்து எரித்தது தெரிய வந்தது. இருவரையும் அந்தியூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை மருத்துவ பரிசோதனை நடந்தது. பிறகு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.