/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்
/
மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்
மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்
மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:38 AM
மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்
டி.என்.பாளையம்:ஆப்பக்கூடலில் இருந்து மணல் லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக, கோபி தாசில்தார் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளிப்பட்டி அருகே வரப்பள்ளம் பாலம் அருகில், தாசில்தார் தலைமையிலான குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரித்தனர். ஆப்பக்கூடல், ஒரிச்சேரிபுதுார், வள்ளியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான லாரி என்பது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தது பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும் தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மேற்கொண்டு
விசாரிக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடி விட்டாராம். இதையடுத்து லாரியை பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.