/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரத்தில் வேன் மோதி டிரைவர் பரிதாப பலி
/
மரத்தில் வேன் மோதி டிரைவர் பரிதாப பலி
ADDED : ஏப் 11, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தில் வேன் மோதி டிரைவர் பரிதாப பலி
கொடுமுடி:எழுமாத்துாரை சேர்ந்தவர் அர்ஜூனன், 41; தனக்கு சொந்தமான மாருதி ஆம்னி வேனில் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு எட்டு பேருடன் சென்றார். நேற்று அதிகாலை ஊர் திரும்பினர். அர்ஜூனன் வேனை ஓட்டினார். கொடுமுடியை அடுத்த வாழநாயக்கன் பாளையம் அருகே அதிகாலை, 3:50 மணிக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தில் வேன் மோதியது. இதில் உடல் நசுங்கி அர்ஜூனன் பலியானார். வேனில் பயணித்த ஏழு பேருக்கும் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.