/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தீண்டாமை நிலை எங்கும் இல்லை'அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
/
'தீண்டாமை நிலை எங்கும் இல்லை'அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
'தீண்டாமை நிலை எங்கும் இல்லை'அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
'தீண்டாமை நிலை எங்கும் இல்லை'அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
ADDED : ஏப் 15, 2025 01:52 AM
'தீண்டாமை நிலை எங்கும் இல்லை'அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
ஈரோடு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தறை சார்பில், சென்னையில் சமத்துவ நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார். இதன் காணொலி நிகழ்ச்சியாக ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து, சென்னையில், 50,000 பேருக்கு முதல்வர் நலத்திட்ட உதவி வழங்கினார். அதுபோல ஈரோடு மாவட்டத்தில், 2,263 பேருக்கு, 14 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்பதை என்னால் ஏற்று கொள்ள இயலாது. எனது சிறு வயதில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என பார்த்துள்ளேன். பெரிய அளவில் மாற்றம் வந்துள்ளது. எங்காவது இரண்டொன்று இருந்தால், அந்த தவறை ஒழுங்கு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். எங்களுக்கு தெரிந்து எந்த இடத்திலும் அப்படிப்பட்ட நிலையை பார்க்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.