தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தெருநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலிசென்னிமலை அருகே மீண்டும் மறியலால் பரபரப்பு-பதற்றம்

தெருநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலிசென்னிமலை அருகே மீண்டும் மறியலால் பரபரப்பு-பதற்றம்

தெருநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலிசென்னிமலை அருகே மீண்டும் மறியலால் பரபரப்பு-பதற்றம்


ADDED : பிப் 18, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெருநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலிசென்னிமலை அருகே மீண்டும் மறியலால் பரபரப்பு-பதற்றம்

சென்னிமலை:சென்னிமலை யூனியன் எல்லை கிராமம் ஊராட்சி ராமலிங்கபுரத்தில், நல்லசிவம் என்பவரின் பட்டியில் தெருநாய்கள் புகுந்து கடித்ததில், சில நாட்களுக்கு முன், 20 ஆடுகள் பலியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில், ௩௦ மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராமலிங்கபுரம், குட்டகாடு தோட்டத்தில் அர்சுனன் தோட்டத்தில் பட்டியில் இருந்த, 15 ஆடுகளை தெருநாய்கள் நேற்று கடித்து கொன்றுள்ளன. இதனால் வெகுண்ட விவசாயிகள், இறந்த ஆடுகளின் உடல்களை, டிராக்டரில் போட்டு கொண்டு சென்னிமலை நகரில் மறியல் செய்ய புறப்பட்டனர். தகவலறிந்து சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சென்னிமலை-ஊத்துக்குளி சாலையில் காந்திநகர் என்ற இடத்தில் டிராக்டரை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே விவசாயிகள் மறியலை தொடங்க

முயன்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ், பா.ஜ., மாநில நிர்வாகி நாகராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மக்கள் திரண்டதால் பரபரப்பு, பதற்றம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அமைப்பினரும் வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னிமலை பி.டி.ஓ., பாலமுருகன், பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், ஆர்.டி.ஓ., ரவி சம்பவ இடத்துக்கு வந்தனர். விவசாயிகள், கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் சாலையோரம் காத்திருப்பு போராட்டத்தை

தொடங்கினர்.அதேசமயம், 15 விவசாயிகள், பா.ஜ., மாநில நிர்வாகி நாகராஜ் தலைமையில் ஈரோடு சென்று அமைச்சர் முத்துசாமியை சந்தித்தனர். இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் காலை, ௭:௩௦ மணிக்கு தொடங்கிய மறியல் மாலை, ௫:௩௦ மணிக்கு நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us