/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் கைது
ADDED : ஜன 31, 2025 01:28 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் கைது
பெருந்துறை,:பெருந்துறையை சேர்ந்த, 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன், சிறுமியின் தாய், தந்தை பிரிந்து விட்டனர். தந்தையுடன் அண்ணனும்,  தாயுடன் சிறுமியும் உள்ளனர். இந்நிலையில் சிறுமியின் தாய், வேல்சாமி, 33, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தாய் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில், வீட்டில் இருக்கும் சிறுமிக்கு, வேல்சாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலருக்கு புகார் போனது. அவர்கள் விசாரணையை தொடர்ந்து, பெருந்துறை  போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார், போக்சோவில் வேல்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

