/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சியில் 8 தீர்மானம் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சியில் 8 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஆக 13, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் சூரியப்பிரகாஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கமலவேணி, ஆணையர் கனிராஜ் முன்னிலை வகித்தனர். நகராட்சிக்கு சொந்தமான கடை மற்றும் நவீன கட்டண கழிப்பிட ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோருதல், குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி, மின்மோட்டார் மற்றும் சிறு மின்விசை பம்பில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணி என எட்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

