/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
/
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 06, 2024 06:10 AM
பெருந்துறை : சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், நேரடி கலந்தாய்வு அமர்வு, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி காலை, 11:௦௦ மணி முதல் மதியம், 1:௦௦ மணி வரை நடக்கும். லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் மூன்று மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை.
தேர்தல் நடத்தை விதி வாபசான நிலையில், வழக்கமான மாதாந்திர குறை கேட்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்-பட்டது. இதனால் ஆண்கள், பெண்கள் என நுாற்றுக்கும் மேற்-பட்டோர் அலுவலகத்துக்கு வந்தனர். கூட்டம் நடக்கும் அரங்கு, வாரிய அலுவலகமாக மாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்-தனர்.
இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரி சாமிநா-தனை சந்தித்து, குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குறை கேட்பு கூட்டம் நடக்கும் அரங்கை, அலுவலகமாக மாற்றி விட்டனர். எங்கள் குறைகளை அதிகாரிகள் கவனத்துக்கு எப்படி சொல்வது? உடன-டியாக குறைதீர் கூட்டரங்கை ஏற்படுத்தி, மக்களை அழைத்து குறை கேட்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட, ௫ பெண்கள் உட்பட, ௪௩ பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.