செவ்வாய், வியாழனில் மக்களை சந்திக்கும் எம்.எல்.ஏ.,
செவ்வாய், வியாழனில் மக்களை சந்திக்கும் எம்.எல்.ஏ.,
ADDED : டிச 18, 2011 03:50 AM
சத்தியமங்கலம்: செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தனது அலுவலகத்தில்,
எம்.எல்.ஏ., சுந்தரம், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பவானிசாகர்,
சத்தியமங்கலம் தொகுதிகளில் இதுவரை பதவி வகித்த எம்.எல்.ஏ.,க்கள், அரசு
கட்டி கொடுத்த தொகுதி அலுவலகத்தை பெயரளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால்,
இதை சரியாக பயன்படுத்துவது பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம்தான்.
புன்செய்புளியம்பட்டியில் வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. அங்குள்ள
பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், வியாழக்கிழமை முழுவதும்
இருந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.
சத்தியமங்கலத்தில்
வாரச்சந்தை நாளான செவ்வாய்கிழமையன்று, ரங்கசமுத்திரத்தில் உள்ள எம்.எல்.ஏ.,
அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். தாளவாடி,
கடம்பூர் பகுதியிலும் அலுவலகம் திறந்து மக்களை சந்தித்து வருகிறார். இதன்
காரணமாக பவானிசாகர் தொகுதி மக்கள், எம்.எல்.ஏ., வை பார்க்க செலவு செய்து,
அவரது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஐந்து ஆண்டுகள் இது தொடர்ந்து
நடக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
