தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு, தனியார் பஸ்களில் பகல் கொள்ளை

அரசு, தனியார் பஸ்களில் பகல் கொள்ளை

அரசு, தனியார் பஸ்களில் பகல் கொள்ளை


ADDED : டிச 19, 2011 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2011 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :மாநில அரசு உயர்த்திய புதிய பஸ் கட்டணத்தை, சில்லரை பிரச்னை வராத வகையில், முழு தொகையாக வசூலிக்கும்படி டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழகத்தில் சாதாரண புறநகர் பஸ், செமி டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏ.சி., பஸ் என 21 ஆயிரத்து 169 பஸ்கள் இயங்குகிறது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் நவ., 17ம் தேதி பஸ் கட்டணம் 75 சதவீதம் உயர்த்தப்பட்டது.சாதாரண புறநகர் பஸ்களில் கி.மீ., 28 பைசாவில் இருந்து 42 பைசாவாகவும், செமி டீலக்ஸ்களில் 32ல் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு பஸ்களில் 38ல் இருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ்களில் 52ல் இருந்து 70 பைசாவாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.தனியார் பஸ்களும் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அரசு பஸ்ஸைவிட தனியார் பஸ்களில் கட்டணம் சற்று குறைவு.பயணிகள் கூறியதாவது:ஈரோடு-சேலம், சேலம்-தர்மபுரியில் இயங்கும் அரசு பஸ்களில் 29 முதல் 39 ரூபாய் வரையும், தனியார் பஸ்களில் 29 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர்.

தினமும் அரசு பஸ் நகர பகுதிக்கு 3 முதல் 4 முறையும், தனியார் பஸ் 5 முறையும் வந்து செல்கின்றன.பயணிகள் நடத்துனர்களிடம் கொடுக்கும் பணத்தில், டிக்கெட் தவிர, மீதமுள்ள சில்லரையை முழுமையாக வருவதில்லை. ஒரு ரூபாய், 2 ரூபாய் பிடித்துக் கொடுக்கின்றனர்.அதையும் மீறி பயணிகள் கேட்டால், தகாத வார்த்தையால் திட்டி, சில்லறை இல்லை என்றால் கீழே இறங்குங்கள் என்கின்றனர்.

இதேநிலை, தனியார் பஸ்களிலும் உள்ளது. சிலர் மறைமுகமாக 20 ரூபாய்க்கு 30 ரூபாய் பஸ் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு தினமும் பயணிகளிடம் இருந்து டிரைவர், கண்டெக்டரும் 100 முதல் 150 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி கூறுகையில், ''மாநில அரசு உயர்த்திய புதிய பஸ் கட்டணம், 29, 34, 50 பைசா போன்றவை ரவுண்ட் செய்ய போக்குவரத்து கழகம் வலியுறுத்தி வருகிறது.இதை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், பிற போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குரவத்து கழகம் ஆகியோர் ஆலோசனை செய்து பஸ் கட்டணத்தை ரவுண்ட்டு செய்யலாம். அதுவரை இப்பிரச்னை நீடிக்கும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us