நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாபாரிகள் ஆலோசனை
பெருந்துறை, ஆக. 30-
ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பெருந்துறை சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராஜா வரவேற்றார். நடைபாதை வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், தினசரி சந்தை, வாரச்சந்தை வியாபாரிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த, பெருந்துறை வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மூலமாக கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.

