/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருட்டு
/
பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருட்டு
ADDED : அக் 20, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அக். 20-
ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் ஸ்டோனி பாலம் அருகே, பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ளது. கோவில் பூசாரி சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டதால், சில நாட்களாக திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவில் ஒரு பக்தர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது உண்டியல் மாயமானதை கண்டு அதிர்ந்தார். அவர் புகாரின்படி ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வந்து விசாரித்தனர். உண்டியலும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒரு பவுன் மதிப்பிலான தாலி, முகப்பு திருட்டு போனது தெரிய வந்தது. வழக்குப்பதிந்த போலீசார்
களவாணியை தேடி வருகின்றனர்.