/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஸ்டேஷனில் ரயில்வே டி.எஸ்.பி., ஆய்வு
/
போலீஸ் ஸ்டேஷனில் ரயில்வே டி.எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 22, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீஸ் ஸ்டேஷனில்
ரயில்வே டி.எஸ்.பி., ஆய்வு
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மூன்றாவது பிளாட்பார்மில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில், கோவை ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரசு வழங்கிய சீருடை மற்றும் பொருட்களின் பயன்பாடு, அவற்றை பராமரிக்கும் விதம் குறித்து ஆய்வு செய்தார். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் ஸ்ரீபிரியா மற்றும் எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.