ADDED : ஜன 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் பர்கூர்மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, அந்தியூர் வனத்துறையினர் விடுத்துள்ள அறிவுரை: மழைக்காலம் முடிந்து பனி அதிகரித்துள்ளது.
இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளது. வன விலங்குகள் குறிப்பாக ஒற்றை மற்றும் கூட்டு யானைகள், மாலை நேரங்களில் அதிகமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதி, வன சாலைகளில் நடமாடுவது அதிகரிக்கும். எனவே வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு விலங்குகளை படம் பிடிப்பது, வேடிக்கை பார்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம். மாலை நேரங்களில் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

