sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆபத்தான கட்டடம் இடித்து அகற்றம்

ஆபத்தான கட்டடம் இடித்து அகற்றம்

ஆபத்தான கட்டடம் இடித்து அகற்றம்


ADDED : ஜன 05, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2025 02:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, :ஈரோட்டில் ஆபத்தான பழைய கட்டடத்தை, மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.

ஈரோட்டில் மேட்டூர் சாலையில் தனியார் இடத்தில், 1970ல் கட்டடம் கட்டப்பட்டது. இடத்தின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இடத்தின் உரிமையாளர் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு

உத்தரவிட்டது. மாநகராட்சி சார்பில், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரி பிரிவு வல்லுனர்கள் கட்டடத்தை ஆய்வு செய்தனர்.

இதில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் ஆபத்தாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வரும் இரு கடைகளின் உரிமையாளர்களை அகற்றிக்கொள்ள மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆணையர் மனிஷ் உத்தரவின்பேரில், உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம், இளநிலை பொறியாளர்கள் சுரன்சிங், சரவணன், உதவி நகர திட்டமிடுதல் கோவிந்தராஜன் முன்னிலையில் இரு பொக்லைன் மூலம் கட்டடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us