/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு
/
கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 07, 2025 02:03 AM
கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து வரும் பகுதிகளில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படுகிறது. இதன்படி கோபி, பெருந்துறை, ஈரோடு தாலுகாக்களில் 9 கொள்முதல் நிலையம் தற்போது செயல்படுகிறது.
இரண்டாம் கட்டமாக வரும், 10ம் தேதி முதல் மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, சத்தி, ஈரோடு, அம்மாபேட்டை வட்டாரங்களில், 29 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. நெல் கிரேடு 'ஏ' - குவிண்டால், 2,450 ரூபாய்; நெல் பொது ரகம், 2,405 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் உரிய சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.

