ADDED : ஜன 17, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் பார்வையாளர்இன்று வருகை
ஈரோடு, : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், தேர்தல் பார்வையாளர்கள் இன்று ஈரோட்டுக்கு வருகின்றனர்.
தேர்தல் பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஜய்குமார் குப்தா, கணக்கு பார்வையாளராக ஐ.ஆர்.எஸ்., அதிகாரி தினேஷ்குமார் ஜாங்கிட், காவல் பார்வையாளராக ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தனா தீப்தி நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் தங்கி, தேர்தல் பணிகளை துவங்குகின்றனர்.