sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லிப்டில் சிக்கிய சிறுமி மீட்பு

லிப்டில் சிக்கிய சிறுமி மீட்பு

லிப்டில் சிக்கிய சிறுமி மீட்பு


ADDED : ஜன 17, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 01:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

லிப்டில் சிக்கிய சிறுமி மீட்பு

ஈரோடு, :ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நான்காவது தளத்தில் கூலி தொழிலாளி ராமச்சந்திரன் வசிக்கிறார். இவரின் மகள் ரியாசினி, 10; நேற்று மாலை, 5:00 மணியளவில் லிப்ட்டில் தரை தளத்துக்கு வந்தார். அப்போது தரை தளத்துக்கும்-முதல் தளத்துக்கும் இடையே லிப்ட் திடீரென நின்றது. மின்சாரமும் துண்டிக்கவில்லை. லிப்ட் வராததால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் பார்த்தபோது, சிறுமி சிக்கி கொண்டு தவித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். குடியிருப்புக்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், ஐந்து நிமிடங்களில் சிறுமியை மீட்டனர். இச்சிறுமி ஏற்கனவே இதேபோல் லிப்டில் சென்ற போது நடுவில் சிக்கி கொண்டார். அப்போது லிப்ட் ஆப்ரேட்டர் மீட்டுள்ளனர். தற்போது லிப்ட் செயல்படாமல் சிக்கி கொண்டதும் தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us