ADDED : ஜன 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பிரசாரத்துக்கு சீமான் வருவார்'
ஈரோடு, : ஈ.வெ.ரா., - அம்பேத்கர் குறித்து சீமான் அவதுாறு பேசுவதால், அவரை பிரசாரத்துக்கு அனுமதிக்கக்கூடாது என ஒரு தரப்பினர் மனு வழங்கிய நிலையில், 'பிரசாரத்துக்கு சீமான் கட்டாயம் வருவார்' என வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அரசியல் என்பது சேவை என்பதை உணர்ந்து சீமான் செய்து வருகிறார். இத்தொகுதியில் எந்த பணியும் நடக்கவில்லை. மஞ்சள் நகரமான ஈரோடு, இன்றைக்கு புற்றுநோய் நகரமாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியினர் சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஈ.வெ.ரா., கூறியதைத்தான் சீமான் கூறினார். இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு சீமான் கட்டாயம் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.